“நாடாளுமன்றத்தில் அவைச் செயல்களை நடத்த விடாமல் தடுப்பதற்கு இப்போது நூதனமான புதிய நடைமுறைகளைக் கையாள்கிறார்கள். எதிர்கட்சிகளை பேச விடாமல் ஆளுங்கட்சி அமளி செய்தால் உடனடியாக சபை நடவடிக்கைகளுக்கு ஊறு விளைவித்து உடனடியாகத் தாங்கள் அவையைப் புறக்கணிப்பதாகக் கூறி எழுந்து சென்று விடுவோம் என்று மிரட்டுவதை பல தலைவர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். மக்களவை என்பது மக்களுக்கான நலத்திட்டங்களைப் பற்றிப் பேச வேண்டிய இடமே தவிர சொந்தப் பகைகளை தீர்த்துக் கொள்ள வேண்டிய இடம் அல்ல என்பது பலருக்குத் தெரியாமல் போய் விடுவது துரதிருஷ்டமானது. ஒரு முறை எதிர்கட்சித் தலைவரொருவர் காலையில் நேரிடையாக எனக்குத் தொலைபேசியில் அழைத்து, ‘இன்று நாங்கள் அவை நடவடிக்கைகளை முடக்குவதாக இருக்கிறோம் என்று தெரிவித்தார், நான், ‘ஏன் அப்படி?’ என்றேன். அதற்கு அவரளித்த பதில், இல்லை, நாங்கள் முன்னதாக இன்று அவை நடவடிக்கைகளை முடக்குவது என்று முடிவு செய்து விட்டோம்’ அதனால் அவையை செயல்பட விடாமல் முடக்கத்தான் போகிறோம் என்றார்.