இந்நிலையில் திமுக தரப்பு தங்களது கோரிக்கையுடன் உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில்... திமுகவின் வழக்கை உயர்நீதிமன்றம் அவசரகால வழக்காகக் கருதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதையொட்டி நடைபெற்ற வழக்கு விசாரணையில் பொறுப்பு நீதிபதி குலுவாடியா ரமேஷ் தலைமையில் அரசு தரப்பு வழக்கறிஞர்களாக மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ், வைத்யநாதன், ராஜகோபாலன் உள்ளிட்டோரும், திமுக சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், சரவணன், இளங்கோ உள்ளிட்டோரும் ஆஜரானார்கள். நீதிபதியின் இல்லத்திலேயே நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாளைக்காலை 8.30 மணியளவில் வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. தமிழக அரசு காலை 8 மணிக்கு பதிலளித்த உடன் 8. 30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் : உயர்நீதிமன்றம்.