டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மர்ம நபர்கள் பின்தொடர்வதாக இந்து மக்கள் கட்சி பிரமுகர் போலிஸில் புகார்

பல்வேறு இடங்களுக்கு பணி சம்பந்தமாக செல்லும் தன்னை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து கண்காணிப்பதாக மெஞ்ஞானபுரம்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:23 pm

கவிதைமணி

பல்வேறு இடங்களுக்கு பணி சம்பந்தமாக செல்லும் தன்னை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து கண்காணிப்பதாக மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி(அனுமன் சேனா)அமைப்பின் உடன்குடி ஒன்றியத் தலைவர் எ.ரவிச்சந்திரன் புகார் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில்,கடந்த செப்.26 ஆம் தேதி செட்டியாபத்து அருகே இரு
சக்கர வாகனத்தில் வந்த தன்னை மர்ம நபர்கள் வழிமறித்து மிரட்டும் தொனியில் விசாரித்தனர். மேலும் பேரூராட்சிகளில் ஒப்பந்த பணிகள் செய்யும் நான் பணி சம்பந்தமாக ஆத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தன்னை இடிப்பது போல சென்றனர்.

பணி சம்பந்தமாக பல்வேறு இடங்களுக்கு செல்லும் என்னை கொல்ல முயற்சிகள் நடப்பதாக அறிகிறேன்.எனவே எனக்கு உரிய பாதுகாப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.