வால்வோ நிறுவனத்தின் புதிய XC90 T8 சொகுசு கார் அறிமுகம்
வால்வோ நிறுவனத்தால் புதிதாக XC90 T8 என்ற சொகுசு காரைஅறிமுகம் செய்துள்ளது.


வால்வோ நிறுவனத்தால் புதிதாக XC90 T8 என்ற சொகுசு காரைஅறிமுகம் செய்துள்ளது. இந்த கார் ஆடி Q7, பிஎம்டபிள்யூ X5, ரேஞ் ரோவர் ஸ்போர்ட்ஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் GLS ஆகிய கார்களின் கலவையாக உருவாகியுள்ளது.
7 பேர் அமர்ந்து செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் ஒரு லிட்டர் டீசலுக்கு 47.6kmpl செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 412 குதிரை வேகத்தில் இயங்கும் வகையிலும், 650Nm முடுக்குவிசை கொண்டதாகவும் உள்ளது. இதனால் வெறும் 5.6 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை அடைய முடியும்.
இந்த காரின் அழகை கூட்டும் விதமாக வெளிப்புறத்தோற்றம் மாற்றி வடிவமைக்கபட்டுள்ளது. சரவுண்டு சிஸ்டத்தில் அருமையாக பாடலை கேட்டு ரசிக்கும் வண்ணம் காரினுள் 20 ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மின்சார தேவைக்காக 2.0 லிட்டர் டர்போசார்ஜ் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ. 1.25 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...