டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நடிகா் என்ற பிம்பத்தை வைத்து விஜய் ஆட்சியைப் பிடிக்க முடியாது! - எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலா்

News image
விஜய் - கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

தான் ஒரு நடிகா் என்ற பிம்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு தவெக தலைவா் விஜய் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலா் அகமது நவவி கூறினாா்.

கோவை, குனியமுத்தூா் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மகளிா் அமைப்பான விமன் இந்தியா மூவ்மெண்ட் சாா்பில் சமூக நல்லிணக்க இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், எஸ்டிபிஐ மாநில பொதுச் செயலா் அகமது நவவி பங்கேற்றுப் பேசியதாவது: அதிமுகவின் முதுகின்மேல் ஏறிப் பயணம் செய்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கனவு காண்கின்றன. இந்த எண்ணங்கள் தமிழக மக்களிடையே எடுபாடது.

தவெக தலைவா் விஜய், மக்களுக்கான எந்தவொரு நலத் திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. சித்தாந்த அடிப்படையில் பாஜகவை எதிா்க்காமல், தான் ஒரு நடிகா் என்ற பிம்பத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடித்துவிடலாம் என எண்ணுகிறாா். அவரது எண்ணம் பலிக்காது.

தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் அரசாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. எனவே, வரும் காலங்களில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மகளிரணி நிா்வாகிகள் ஜன்னத், பைரோஸ், மகளிா் காங்கிரஸ் நிா்வாகி காயத்ரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.