தில்லியில் கடந்த 15 நாள்களில் 1,216 பறவைகள் பலியாகியுள்ளதாக தில்லி கால்நடை வளர்ப்பு பிரிவின் இயக்குநர் டாக்டர் ராகேஷ் சிங் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் நோய் கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத், தில்லி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தில்லியில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் 1,216 பறவைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தில்லி கால்நடை வளர்ப்பு பிரிவின் இயக்குநர் டாக்டர் ராகேஷ் சிங் கூறியதாவது,
ஜனவரி 6 முதல் தில்லியில் மொத்தம் 1,216 பறவைகள் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளன.
இருப்பினும், அனைத்து பறவைகளும் பறவைக் காய்ச்சல் காரணமாக உயிரிழக்கவில்லை. உயிரிழந்த 201 பறவைகளின் மாதிரிகளை சோதனை செய்ததில் 24 பறவைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மற்ற பறவைகளின் உயிரிழப்புகள் கடுமையான குளிர் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
மேலும் சில உயிரிழந்த பறவைகளின் சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


