/

தில்லியில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் வருகை குறைவு

தில்லியில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று(திங்கள்கிழமை) 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

News image

கரோனா அச்சத்தால் மாணவர்கள் பள்ளிக்கு வராததால் காலியாக உள்ள வகுப்பறை.

Updated On :18 ஜனவரி 2021, 10:25 am

தில்லியில் 10 மாதங்களுக்கு பிறகு இன்று(திங்கள்கிழமை) 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. பின், மத்திய அரசு அளிக்கப்பட்ட தளர்வை அடுத்து பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தில்லியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளின் இறுதித் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் இன்றுமுதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

தில்லி அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

பெற்றோர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு அனுப்பலாம். வருகைப் பதிவிற்காக பள்ளிக்கு வர நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது என்று மாநில அரசு தெரிவித்துள்ள நிலையில் பல பள்ளிகள் கரோனா பரவலுக்கு அச்சப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.