மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லி முதல்வர் மகளிடம் பணமோசடி: 3 பேர் கைது

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகளிடம் ஆன்லைன் மோசடி செய்த கும்பலை சேர்ந்த 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

News image

தில்லி முதல்வர் மகளிடம் பணமோசடி செய்த 3 பேர் கைது

Updated On :15 பிப்ரவரி 2021, 9:52 am

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகளிடம் ஆன்லைன் மோசடி செய்த கும்பலை சேர்ந்த 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மகள் ஹர்ஷிதா, கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி பழைய சோபா ஒன்றை ஆன்லைன் மூலமாக விற்பதற்கு பதிவிட்டுள்ளார். இந்த விளம்பரத்தைப் பார்த்து தொடர்பு கொண்ட ஒருவர் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் அனுப்பிய க்யூ. ஆர். கோடை ஸ்கேன் செய்த ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 20,000 மற்றும் ரூ. 14,000 என மொத்தம் ரூ. 34,000 பணம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதையறிந்த ஹர்ஷிதா தில்லி சிவில் லைன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மதுரா எல்லையில் சஜித்(26), கபில்(18) மற்றும் மன்வீந்திர் சிங்(25) ஆகியோரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், முக்கியக் குற்றவாளியான வாரிஸ்(25) என்பவரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.