மேற்கு வங்கத்தில் வாக்களிக்க செல்லும் பெண்கள், பொதுமக்களை மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் தாக்குவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் போது சிஆர்பிஎஃப் வீரர்கள் வாக்களிக்க வந்தவர்களை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கூச் பெஹாரில் மம்தா பேசியதாவது,
சுதந்திரமான மற்றும் நியாயமான வாக்கெடுப்புகளை நாங்கள் விரும்புகிறோம், பொதுமக்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். சிஆர்பிஎஃப் வீரர்கள் பொதுமக்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைவதைத் தடுக்கக்கூடாது.
உண்மையான வீரர்கள் இருக்கும் சிஆர்பிஎஃபை நான் மதிக்கிறேன், ஆனால் தொல்லை செய்கிற, பெண்களைத் தாக்கும் மற்றும் மக்களைத் துன்புறுத்தும் பாஜகவின் சிஆர்பிஎஃபை நான் மதிக்கமாட்டேன் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டோ ஓட்டுநா் மா்ம மரணம்

கூத்தாண்டவா் கோயிலுக்கு இதுவரை அளித்த தங்க நகைகளுக்கான கணக்கு விவரம் இல்லை! திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

ஜூன், ஜூலையில் சென்னையில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள் விவரம்!

உக்கடம் சந்தையில் களைகட்டிய கடல் மீன்கள் விற்பனை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


