பள்ளிகள் திறக்காதது, குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பொது முடக்கம் அமலில் உள்ளது, மக்களிடம் வருவாய் இழப்பு, ஏற்றுமதியில் ஏற்பட்ட பாதிப்பு, உணவகங்கள் முழுமையாக செயல்படாதது போன்றவற்றால் நாமக்கல் மண்டல பண்ணைகளில் 12 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன. கடந்த மூன்று மாதத்தில் ஓரிரு வாரங்கள் மட்டுமே இத்தொழிலில் பண்ணையாளர்கள் வருவாயை ஈட்ட முடிந்தது. உற்பத்தி செலவுக்கு ஏற்ப லாபம் கிடைக்கவில்லை.
மத்திய அரசு கோழிப் பண்ணை தொழிலுக்கு வங்கிகள் மூலம் வழங்குவதாக அறிவித்த கடன் தொகையை முழுமையாக வழங்கவில்லை. வங்கி அதிகாரிகளும் அது தொடர்பான தகவல்களை தர மறுக்கின்றனர். மிகவும் மோசமான சூழலில் உள்ள கோழி பண்ணை தொழில் மத்திய, மாநில அரசுகள் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.