/

ரஷியாவின் தடுப்பூசி 2 ஆண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்

ரஷியா கண்டுபிடித்துள்ள கரோனா தொற்றுக்கான தடுப்பூசி இரண்டு ஆண்டுகள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:06 pm

UNI

மாஸ்கோ : ரஷியா கண்டுபிடித்துள்ள கரோனா தொற்றுக்கான தடுப்பூசி இரண்டு ஆண்டுகள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

காமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசிக்கு ரஷிய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்தது.

இது குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பில், இரண்டு கட்டங்களாக போடப்படும் இந்த தடுப்பூசி மூலம் இரண்டு ஆண்டுகள் வரை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக உதவியாக இருக்கும்.

இந்த தடுப்பூசியை விலங்குகள் மீது சோதனை செய்யப்பட்டு, பின்னர் இரண்டு குழு தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.