கர்நாடகத்தில் காரில் கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்
கர்நாடக மாநிலம், படகல் அருகே ரூ. 60 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ. 61 லட்சம் ரொக்கத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.


கர்நாடக மாநிலம், படகல் அருகே ரூ. 60 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ. 61 லட்சம் ரொக்கத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.
இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கர்நாடக மாநிலம் ஹுப்லியில் இருந்து பட்கலிற்கு காரில் இருவர் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஹூவினா சவுக்கா அருகே வந்தபோது காவல் துறையினர் சந்தேகமடைந்து வாகனத்தை சோதனை செய்தோம்.
சோதனை செய்த போது காரில் 1 தங்கக் கட்டி, 8 தங்க நாணயங்கள், 5 கிலோ தங்கம் மற்றும் ரூ.61 லட்சம் ரொக்கம் காரில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கார் மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...