தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

காமன்வெல்த் 2018: சிறப்பாக விளையாடிய இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

காமன்வெல்த் 2018 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீரங்கனைகள் மற்றும் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்றவர்களுக்கு

News image
Updated On :15 ஏப்ரல் 2018, 1:24 pm

புதுதில்லி: காமன்வெல்த் 2018 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீரங்கனைகள் மற்றும் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்றவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

21-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 256 வீரர்,வீராங்கனைகள் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். கடந்த 11 நாட்களாக நடந்த விளையாட்டுப் போட்டிகள் இன்று 
ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 10வது நாள் ஆட்டத்தில் இந்தியா 8 தங்கம் உள்பட 17 பதக்கங்களை பெற்றது. நேற்றைய.ஆட்டத்தின் முடிவில் இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலம் ஆக மொத்தம் 59 பதக்கம் பெற்று இருந்தது. 

கடைசி நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் 1 தங்கம், 4 வெள்ளி, இரண்டு வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றனர். பாட்மிண்டன் பிரிவில் சாய்னா தங்கமும், பி.வி.சிந்து வெள்ளியும், கிடம்பி சிறீகாந்த் வெள்ளி பதக்கமும் வென்றனர். இந்தியாவுக்கான 26-வது தங்கத்தை சாய்னா நேவால் பெற்றார். 

21-வது காமென்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது. பதக்க பட்டியலில் 80 தங்கப்பதக்கம், 58 வெள்ளி, 59 வெண்கலம் உள்ளிட்ட 197 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் உள்ளிட்ட 137 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. 

இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் மற்றும் சிறப்பாக விளையாடி பதங்களை வென்றவர்களுக்கு என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளின் வெற்றி, அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்தி உள்ளனர். சிறப்பாக விளையாடிய செயல்திறன் மூலம் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளனர். அவர்களின் வாழ்க்கை வரலாறு, அர்ப்பணிப்பின் சக்தியை உணர்த்துவதுகிறது. அவர்களின் பங்களிப்பும் விடா மயற்சியும் பல தடைகளை கடந்து அர்ப்பணிப்புடன் விளையாடி உயர்ந்த வெற்றியை பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். காமன்வெல்த் போட்டியில் பெற்ற வெற்றிகள் விளையாட்டில் ஈடுபட மேலும் இளைஞர்களை ஊக்குவிப்பதுடன், ஒவ்வொருவரின் வாழ்க்கையில், உடல் தகுதி முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். 

இதேபோன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், காமன்வெல்த் விளையாட்டுபோட்டிகளில் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தை பெற்று தந்த வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். 

மேலும் காமன்வெல்த்தில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் அற்புதமான செயல்திறன் மூலம் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளதுடன் லட்சகணக்கான மக்களுக்கு முன்மாதிரியாக உள்ள உண்மையான வீரர்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.