உலக தரத்திற்கு நமது கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் அமைய வேண்டும்: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு
ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள


ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர் திருப்பதியில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடந்த மாநாட்டில் மேலும் அவர் பேசுகையில், ''நமது நாட்டின் தொலைநோக்குப் பார்வைக்கு நமது விஞ்ஞானிகள் தங்களது வலுவான பங்கேற்பை அளித்து வருகின்றனர்.
அறிவியலில் சிறந்து விளங்க இந்தியாவில் அதிக வாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது. அறிவியல் சார்ந்த சமூக பொறுப்பு, கார்பரேட் சார்ந்த சமூக பொறுப்பு என அனைத்து அறிவியல் சார் நிறுவனங்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளுடன் இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.
அறிவியலை நமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளாமல், எளிதான முறையில் கையாள வேண்டும். நமது அறிவை புதிய கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் சிறந்த அறிவியல் வளர்ச்சியைப் பெற முடியும். உலக தரத்திற்கு நமது கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் அமைய வேண்டும். அதற்காக நமது அறிவியலை, தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.
அடிப்படை அறிவியலில் இருந்து தொழில்நுட்பப் பயன்பாடு வரை அனைத்து இடங்களிலும் அறிவியல் சார் தொழில்நுட்பத்திற்கு உதவ மத்திய அரசு தயாராக இருக்கிறது. தொழில்நுட்பத்திற்கும், மனித உழைப்புக்கும் மிகப்பெரிய சவால் எழுந்துள்ளது. இதை நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நமது சமூகத்தை சக்தி வாய்ந்ததாக, வலுவானதாக மாற்ற ஓய்வின்றி உழைத்துக் கொண்டு இருக்கும் நமது விஞ்ஞானிகளுக்கு நமது தேசம் நன்றி கடன்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நாம் அனைவரும் எம்.ஜி.கே .
மேனனை இழந்தோம். இன்று உங்களுடன் இணைந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்'' என்றார்.
இந்த மாநாட்டில் ஆந்திரப்பிரதேசம் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட விஞ்ஞானிகள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...