சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

80 ஆயிரம் குழந்தைகளுக்கு தட்டம்மை, ருபல்லா தடுப்பூசி: சுகாதார இயக்குநர்

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 80 ஆயிரம் குழந்தைகளுக்கு தட்டம்மை, ருபல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கேவி.ராமன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:00 am

ப. சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 80 ஆயிரம் குழந்தைகளுக்கு தட்டம்மை, ருபல்லா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கேவி.ராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் சார்பில் தட்டம்மை, ருபல்லா நோய்த் தடுப்பூசி போடும் திட்டத்தை கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், லட்சத் தீவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

தட்டம்மை, ருபல்லா நோயை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும், 9 மாதங்கள் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளை பாதுகாக்கவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதுவையில் பிப்ரவர் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 3.1 லட்சம் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி போடப்படும் என அரசு அறிவித்தது.

அதன்படி கடந்த 6-ம் தேதி தட்டம்மை, ருபல்லா தடுப்பூசி போடும் பணியை சுகாதார அமைச்சர் மல்லாடி தொடங்கி வைத்தார். தடுப்பூசி போடப்பட்டதால் ஏறக்குறைய 10-க்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த 7-ம் தேதி வரை 2 நாள்களில் மொத்தம் 60 ஆயிரம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் இடையில் சில நாள்கள் நாடாப்புழு மருந்து வழங்கப்பட்டதால் தட்டம்மை தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக சுகாதார இயக்குநர் டாக்டர் ராமன் திங்கள்கிழமை கூறியதாவது:

இந்நிலையில் மீண்டும் அப்பணி தொடங்கப்பட்டு இதுவரை புதுவை மாநிலம் முழுவதும் 80000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எந்த பின்விளைவு அல்லது பக்க விளைவுகளோ ஏற்படவில்லை. வெற்றிகரமாக அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே ஒருமுறை தட்டம்மை தடுப்பூசி போட்டிருந்தாலும் தற்போதும் போடலாம். சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள், பெற்றோர் நம்பத் தேவையில்லை. அதை பரப்புவோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தட்டம்மை நோய் தடுப்பூசி போடுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் அரிமா சங்கமும் இணைந்துள்ளது.

ஒரு வார காலம் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் வேன் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை மூலம் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. தொடர் இருமல், சளி பாதிப்பு, காய்ச்சல் உள்ளோர் கண்டிப்பாக சோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார் ராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.