சாத்தூர் அருகே சிறுமியை மானபங்கம் செய்ய முயற்சித்தவர் கைது
சாத்தூர் அருகே சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றதாக ஒருவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.


சாத்தூர் அருகே சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றதாக ஒருவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சாத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்த அழகேஸ்வரன்-அழகுராணி தம்பதியரின் மகள் ஷோபனா(7). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறராம். இந்நிலையில் அருகில் குருலிங்காபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சனிக்கிழமை மாலையில் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அப்பகுதியைச் சேர்ந்த செல்வம் என்கிற செல்வவிநாயகம்(50) மிதிவண்டியில் ஏற்றிக் கொண்டு கடையில் இனிப்பு மிட்டாய் வாங்கி கொடுத்துள்ளார். அதையடுத்து, கிராமத்திற்கு ஒதுக்குபுறமாக கருவேலங்காட்டிற்குள் அழைத்துச் சென்று சிறுமியை மானபங்கம் செய்ய முயற்சித்தாராம்.
இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து தாயார் அழகுராணியிடம் குழந்தை தெரிவித்துள்ளது. இது குறித்து உடனே சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அழகுராணி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து செல்விநாயகத்தை கைது செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...