விருதுநகரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை அதிகாரி வீட்டில் 7 சவரன் நகை திருட்டு
விருதுநகர் அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை அலுவலரின் வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து


விருதுநகர் அருகே ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை அலுவலரின் வீட்டின் கதவை உடைத்து 7 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே என்.ஜி.ஓ.காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன்(62). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், கடந்த 3 நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தாராம்.
இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலையில் விருதுநகரில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, வீட்டின் பூட்டு மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 சவரன் நகையை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் எடுத்துத் சென்றிருந்தது தெரியவந்தது.
உடனே இது தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் ஜெகநாதன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...