டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் மாவட்டத்தில் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான விண்ணப்பம் விநியோகம்

விருதுநகர் மாவட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான விண்ணப்பம் விநியோகம் 14-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரையில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:36 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான விண்ணப்பம் விநியோகம் 14-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரையில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் முதல்வர் மோகன்ராம் வெள்யிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் அருப்புக்கோட்டையை அடுத்த பாலையம்பட்டியில் உள்ள விருதுநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலும் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கான விண்ணப்பங்களை எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250ம், இதர பிரிவினருக்கு ரூ.500ம் ரொக்கமாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இப்படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அசல் சான்றிதழ்களின் நகலையும் இணைத்து விண்ணப்பங்கள் பெற்ற இடத்திலேயே நேரில் ஒப்படைக்க வேண்டும் என பயிற்சி நிலையத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.