திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடிவருகின்றனர்.
திருவெறும்பூர் அருகேயுள்ள பிரகாஷ் நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் நா. இருசப்பன் (53). பெல் நிறுவனத்தில் தயாரிப்பு பிரிவில் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 7-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு திருச்செந்தூர் கோயிலுக்கு சென்ற இவர், சனிக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து இருசப்பன் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸôர் சம்பவ நடந்த வீட்டை பார்வையிட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று தடயங்களை பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

