டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் அருகே பைக் மோதி அரசு பேருந்து பணியாளர் சாவு

விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் அரசு போக்குவரத்து கழக பணியாளர் படுகாயம் அடைந்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:51 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் அரசு போக்குவரத்து கழக பணியாளர் படுகாயம் அடைந்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

விருதுநகர் சத்திரரெட்டியபட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(56). இவர் விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இரவு பணிக்கு செல்வதற்காக சத்திரப்பட்டி சாலையில் நடந்து சென்ற போது எதிரே வந்த கொக்கலாஞ்சேரி ஊராட்சி தலைவர் ரமேஷ் ஓட்டி வந்த  இருசக்கர வாகனம் மோதியது.இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சின்னச்சாமி படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் சின்னராஜா பாண்டியன்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் ஊராட்சி தலைவர் ரமேஷ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.