டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகரில் தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

விருதுநகரில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:50 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

உயர்நீதிமன்ற உத்தரவின் படி ஜூலை 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் தலைக்கவசம் அணிவது என்பது கட்டாயமாகும். அதனால், இதை வலியுறுத்தி விருதுநகர் கச்சேரி சாலையில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்துக் காவலர்களும் தலைக்கவசம் அணிந்து பேரணியில் பங்கேற்றனர்.இப்பேரணியை காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இப்பேரணி கச்சேரி சாலை, சிவகாசி சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி நடைபெற்றது. அதோடு, விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு காவல் துறையினர் விநியோகம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு காவல் நிலையம் மற்றும் பஜார் காவல் நிலைய போலீஸார்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.