டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

உரம், விதைகள் இருப்பு தொடர்பாக விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க ஏற்பாடு

விவசாயிகள் பயனடையும் வகையில் உரம், விதைகள் ஆகியவை விற்பனை நிலையங்களில் இருப்பு தொடர்பாக வேளாண்துறை குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:49 am

எஸ். பாண்டியன்

விவசாயிகள் பயனடையும் வகையில் உரம், விதைகள் ஆகியவை விற்பனை நிலையங்களில் இருப்பு தொடர்பாக வேளாண்துறை குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வேளாண்துறை இணை இயக்குநர்(பொறுப்பு) செண்பகமூர்த்தி செவ்வாய்கிழமை கூறியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், குறிப்பிட்ட பருவத்தில் ஒரே நேரத்தில் விவசாயிகள் சாகுபடியை மேற்கொள்வர். அப்போது, விற்பனை நிலையங்களில் உரம் மற்றும் விதைகள் இருப்பு பற்றாக்குறை ஏற்படும்.  அப்போது, ஏற்படும் அலைச்சலையும், குறிப்பிட்ட நேரத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலையுள்ளது. இதைக் கருத்திற்கொண்டு ஒவ்வொரு  விற்பனை நிலையங்களைச் சேர்ந்தோர் என்னென்ன விதைகள், இடுபொருள்கள் இருப்பு உள்ளது என்பது குறித்து வேளாண்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகம் மூலம் இருப்பு குறித்து விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் இருப்பு உள்ள கடைகளுக்கு சென்று விதை மற்றும் இடுபொருள்களை எளிதாக பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் தகவல் மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அலைச்சல் தவிர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு தேவையானவைகளை பெற்றுக் கொள்ளும் வகையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவ்வப்போது பயிர் சாகுபடிகேற்ப தொழில் நுட்ப உதவிகளும் குறுஞ்செய்தி மூலம் அளிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.