விருதுநகர் அருகே முத்துலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் என்பவரின் மகள் உமாமகேஸ்வரி(22). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இருளாண்டியின் மகன் கணேமூர்த்திக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம். அப்போது, 10 சவரன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.1.50 லட்சத்திற்கு சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டதாம். இந்நிலையில், 10 சவரன் நகையை கணவர் வாங்கி வைத்துக் கொண்டதோடு, மேலும் நகை வாங்கி வரும்படி கூறி உணவு அளிக்காமல் கொடுமைப்படுத்தினாராம். இதற்கு அவரது தாய், தந்தை உள்ளிட்டோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதையடுத்து கோபித்துக் கொண்டு உடனே தாய் வீட்டிற்கு வந்தாராம்.