டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திருச்சுழி அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து மாணவன் சாவு: 2 பேர் காயம்

திருச்சுழி அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:39 am

எஸ். பாண்டியன்

திருச்சுழி அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமுவின் மகன்களான ராஜேஷ்கண்ணன்(13), காளிகண்ணன்(14). இவர்கள் இருவரும் திருச்சுழியில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8, 9-ம் வகுப்புகளில் படித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் பரமக்குடியில் உள்ள பள்ளியில் சேர முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் பள்ளியில் திங்கள்கிழமை மாற்றுச்சான்றிதழ் பெற்றுக் கொண்டு தனது சித்தி மகன் வடிவேல்முருகன்(21) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பரமக்குடி நோக்கிச் சென்றனர்.

அப்போது, திருச்சுழி-நரிக்குடி சாலையில் வேகமாகச் சென்று சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேரும் காயம் அடைந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த நரிக்குடி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி திங்கள்கிழமை இரவு ராஜேஷ்கண்ணன் உயிரிழந்தார்.

இது தொடர்பாக திருச்சுழி காவல் நிலையத்தில் ராமு கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.