டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

திருச்சுழி அருகே அரசு பள்ளியில் மடிக்கணினி, மின்சாதன பொருள்கள் திருட்டு

திருச்சுழி அருகே அறைக்கதவை உடைத்து அரசு பள்ளியில் மடிக்கணினி மற்றும் மின்சாதன பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:39 am

எஸ். பாண்டியன்

திருச்சுழி அருகே அறைக்கதவை உடைத்து அரசு பள்ளியில் மடிக்கணினி மற்றும் மின்சாதன பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே புலிக்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறை பள்ளிகள் அனைத்தும் திங்கள்கிழமை தொடங்கியுள்ளன. இதையடுத்து பள்ளி முடிந்து செல்கையில் அனைத்து அறைகளையும் ஆசிரியர்கள் பூட்டிவிட்டுச் சென்றனர். இதையடுத்து, செவ்வாய்கிழமை காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது, பள்ளி வளாகத்தில் கணிப்பொறி அறைக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் மடிக்கணினி, ஒலி கூட்டும் மின்சாதன பொருள்கள் ஆகியவைகளை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியை கங்காதேவி திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பள்ளியின் அறைக்கதவை உடைத்து மடிக்கணினி உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.