டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருவதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு பாட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:15 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருவதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு பாட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட சிறு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.விநாயகமூர்த்தி திங்கள்கிழமை ஆட்சியர் வே.ராஜாராமனுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: இம்மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் வட்டார பகுதி கிராமங்களில் சட்டவிரோதமாக வீடுகளில் பட்டாசுகளை தயாரித்து வருகி்ன்றனர். இதில் குறிப்பாக சாத்தூர் பகுதியில் துரைச்சாமிபுரம், தாயில்பட்டி, கலைஞர் காலனி, சிவகாசி பகுதியில் வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம், மீனாட்சிபுரம், கீழத்தாயில்பட்டி மற்றும் வெற்றிலையூரணி ஆகிய கிராமங்களில் பட்டாசுகள் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், இவர்களுக்கு பட்டாசுகள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களான கந்தகம், சல்பர் எங்கிருந்து கிடைக்கிறது என்பது தெரியவில்லை. சல்பர் என்பது அரசிடம் உரிமம் பெற்ற ஆலைகளுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய மூலப்பொருளாகும்.

இதுபோன்ற காரணங்களால் முறையாக உரிமம் பெற்று ஆலைகளில் தயார் செய்யப்படும் பட்டாசுகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. இத்தொழிலை நம்பி 3 லட்சம் பேர் நேரிடையாகவும், மறைமுகமாக அச்சகம், பண்டல் அட்டை தயாரிப்போர், அட்டைபெட்டி ஒட்டுதல், ராக்கெட் குச்சி, சக்கர குப்பி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு தொழிலில் 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், சீன பட்டாசுகளையும் சட்டவிரோதமாக கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர்.

இதனால் பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களின் விலையேற்றம், தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்வதால் அதற்கேற்ப விலை கிடைக்காத நிலையுள்ளது. இதுபோன்ற காரணங்களால் பட்டாசு தொழில் நலிவைச் சந்திக்க வேணடிய சூழ்நிலையேற்பட்டுள்ளது.

எனவே உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.