சத்துணவு ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்
விருதுநகர் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது.


விருதுநகர் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை மாலையில் நடைபெற்றது.
விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கட்டட வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்புக்காளை வேலை அறிக்கையை சமர்பித்தார். இதில், மாவட்ட துணைத் தலைவர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், கருப்பையா ராஜாமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லட்சுமிநாராயணன், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் இ.மாயமலை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில செயலாளர் ஆர்.அய்யம்மாள் நிறைவுரையாற்றினார்.
இக்கூட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த மாவட்ட அளவிலான ஆயத்த மாநாடு விருதுநகரில் வருகிற மார்ச் மாதம் 14-ம் தேதி நடத்துவது எனவும், ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில், நிறைவாக மாவட்ட பொருளாளர் எ.பாத்திமாமேரி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...