கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் அதிக மகசூல் பெறும் வகையிலான பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதற்காக கிராமங்களில் விவசாயிகள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, நாள்தோறும் வேளாண்மை அலுவலர்கள் வயலுக்கு சென்று பயிர்களை பார்வையிட்டு ஆலோசனை வழங்கும் வகையில் நிரந்தர பயணத்திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதோடு, வேளாண்மை உதவி செயல் அலுவலர்களின் செயல் திட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை, துவரை உள்ளிட்ட பயிர்களை பார்வையிட்டார். அதையடுத்து, இப்பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.