2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

தொடக்க கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தொடக்க கல்வி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:38 am

எஸ். பாண்டியன்

தொடக்க கல்வி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் செவ்வாய்கிழமை மாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அழகராஜ் அனைவரையும் வரவேற்று தீர்மானங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். மாநில துணை பொதுச்செயலாளர் முனியாண்டி, தலைமை நிலையச் செயலாளர் ஆறுமுகம், மகளிரணி செயலாளர் ராமலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினார்கள். மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன் வரவு செலவு அறிக்கையை வாசித்தார்.

இதில், நிகழாண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையை பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து பட்டியல் தொகையை மாவட்ட அமைப்பில் செலுத்த வேண்டும். தமிழக ஆசிரியர் கூட்டணி, அகில இந்திய ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து இந்தாண்டில் மே-13ம் தேதி புதுதில்லியில் நடத்தும் கல்விக் கருத்தரங்கில் விருதுநகர் மாவட்ட கிளையின் சார்பாக 100 ஆசிரியர்கள் பங்கேற்பது என்றும், இதில் பங்கேற்க ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பிப்.15-ம் தேதிக்குள் வட்டார அமைப்பில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல், உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு வழங்கும் விலையில்லா பொருள்களை அரசே நேரிடையாக பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்டோருக்கான உதவித் தொகை பெற விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் நிறைவாக மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன் நன்றி கூறினார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.