/

திருச்சி மத்திய சிறைச்சாலை முற்றுகை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட 750 பேர் கைது

மத்திய சிறைகளில் உள்ள சிறப்பு முகாம்களை மூடக் கோரி, திங்கள்கிழமை திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் உள்ளிட்ட 750 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:31 am

சி.சண்முகவேல்

மத்திய சிறைகளில் உள்ள சிறப்பு முகாம்களை மூடக் கோரி, திங்கள்கிழமை திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் உள்ளிட்ட 750 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக மத்திய சிறைகளில் உள்ள சிறப்பு முகாமிகளில் அடைக்கப்பட்டுள்ள ஈழ தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என வலியுறுத்தி, திருச்சி மத்திய சிறைச்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில்

1000-த்துக்கும் மேற்பட்டோர் திருச்சி மத்திய சிறைச்சாலை முன் திரண்டனர்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாநகரக் காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர் தலைமையிலான போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வை. காவேரி, மே.ப. காமராஜ், 36 பெண்கள் உள்பட 750 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

முற்றுகை போராட்டத்தால் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியது: இலங்கையில் இனப்படுகொலை நடந்த போது அங்கிருந்து ஏரளமான ஈழ தமிழர்கள், தமிழகத்தில் அடைக்கலம் புகுந்தனர். அதில் சிலர் போலி பாஸ்போர்ட்டில் வந்ததாக கூறி, கைது செய்யப்பட்டு, தமிழக சிறைகளிலுள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு முகாம்களில் உள்ள ஈழ தமிழர்களை உடனே விடுதலை செய்து, அவர்கள் விரும்பு நாடுகளுக்கு அவர்களை அனுப்பி வைக்கவேண்டும். சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்றார்.

பெட்டிச் செய்தி: இந்த போராட்டத்தின் போது, காவல் துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர்,முன்னாள் எம்.எல்.ஏ.வை.காவேரியை பார்த்து ஹிந்தியில் மொழியில் திட்டினார். இதனால் கட்சியினருக்கும், துணை ஆணையர் சரோஜ்குமார் தாகூர் இடையே பயங்கர வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து உதவி ஆணையர் அருள்அமரன் அவர்களை சமதானப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தினால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.