திருச்சி துவாக்குடி அருகே பழுதாகி சாலையோரத்தில் நின்ற லாரி மீது கார் மோதியதில் கட்டட தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துறையூர் அருகேயுள்ள நரசிங்கபுரம்,வைரசெட்டிப்பாளையம்,மருதபுரம் பகுதியைச் சேர்ந்த 7 பேர் ஒரு காரில் நாகூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். மருதபுரம்,புதுத்தெருவைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மணிகண்டன் என்பவர் காரை ஓட்டினர்.
திருச்சி துவாக்குடி அருகேயுள்ள தேவராயநேரி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த போது அங்கு விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்களானது. இதில் பலத்த காயமடைந்த நரசிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் பெரியசாமி(32) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வைரசெட்டிப்பாளையம்,முத்துராஜ பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார மனைவி கோகிலா(30),இவரது மகள் சாதனா(6),மருதபுரம் கமாலூதீன் மகன் நிசாருதீன்(13),இவரது சகோதரிகள் ரகமதுநிஷா(22), கஜிதா(6),கார் ஓட்டுநர் மணிகண்டன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த துவாக்குடி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பெரியசாமியின் சடலத்தையும், இடிப்பாடுகளில் பலத்த காயத்துடன் சிக்கியிருந்தவர்களையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

