தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஜெயலலிதா விடுதலைக்காக கோவில்களில் பூஜை

ஜெயலலிதா விடுதலைக்காக வால்பாறை கோவில்களில் அதிமுகவினர் சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

Updated On :3 அக்டோபர் 2014, 3:37 am

ஜெயலலிதா விடுதலைக்காக வால்பாறை கோவில்களில் அதிமுகவினர் சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

வியாழக்கிழமை வால்பாறை பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையும்,சுப்பிரமணியசுவாமி கோவிலில் அபிஷேக பூஜைகள் மற்றும் தேவாலயங்களில் பிராத்தனைகள் நடத்தப்பட்டது.. வால்பாறை தொகுதி செயலாளர் வி.அமீது தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜைகளில் நகர செயலாளர் மயில்கணேசன், பாசறை இணைச் செயலாளர் சாலவுதீன் அமீது, பேரவை செயலாளர் நரசப்பன், மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள் தன்ராஜ், நெல்லை உட்பட கட்சியை சேர்ந்த திரளானோர் இதில் பங்கேற்றனர். இதே போல் வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் அதிமுகவினர் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் இனைந்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள். கடந்த சில தினங்களாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைகளை புறக்கனித்து வருவதால், தேயிலை பறிக்கும் பணியும் பாதிப்படைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.