தாலிக் கயிற்றால் மனைவியை இறுக்கிக் கொன்ற கணவர் கைது
மதுரை அருகே தான் கட்டிய தாலிக் கயிறு மூலம் மனைவியின் கழுத்தை இறுக்கி கொன்றதாக கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.குடிப் பழக்கத்தால் மனைவியைக் கொன்ற கணவர் கைதாகி


மதுரை அருகே தான் கட்டிய தாலிக் கயிறு மூலம் மனைவியின் கழுத்தை இறுக்கி கொன்றதாக கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.குடிப் பழக்கத்தால் மனைவியைக் கொன்ற கணவர் கைதாகி சிறை சென்ற நிலையில்,அவர்களது 4 பெண் குழந்தைகளும் கதறி அழுதது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
மதுரை அருகேயுள்ளது கொடிமங்களம். இவ்வூரைச் சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மனைவி அழகு (35). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர். முருகன் அடிக்கடி குடித்துவிட்டு போதையுடன் வீட்டுக்கு வந்ததால், கணவன்,மனைவியிடையே தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இந்நிலையில், இன்று காலையிலும் தகராறு ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த முருகன் மனைவியை அவரது தாலிக்கயிற்றால் இறுக்கியுள்ளார். தாலிக்கயிறு கழுத்தை அறுத்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அழகு உயிரிழந்தார். சம்பவம் அறிந்ததும் நாகமலைப்புதுக்கோட்டை போலீஸார் விரைந்து சென்று அழகுவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
முருகனின் போதைப் பழக்கமே அவரது மனைவியையும் கொன்று, பெண் குழந்தைகளையும் அனாதையாக்கிவிட்டது என அப்பகுதியினர் கூறுகின்றனர். மதுரை ஊரகப்பகுதிகளில் சமீப காலமாக போதைப் பழக்கத்தாலே அடிதடி, விபத்து என அசாதாரணச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...