விருதுநகர் மாரியம்மன் திருக்கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
இத்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதேபோல், தேசபந்து மைதானத்தில் இரவு நேரங்களில் கலைநிகழ்ச்சிகளுக்கும்


விருதுநகர் மாரியம்மன் திருக்கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. இதைத் தொடர்ந்து 10-ம் தேதி வரையில் திருவிழா நடைபெற இருக்கிறது.
இத்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதேபோல், தேசபந்து மைதானத்தில் இரவு நேரங்களில் கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திருவிழா ஏப்.6ம் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின் 7-ம் தேதி கயிறு குத்துதல், அக்னிச் சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துதல், 8-ம் தேதி வெயிலுகந்தம்மன், மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டம் நிகழ்ச்சியும், 10ம் தேதி மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டும் நிகழ்ச்சியுடன் திருக்கோயில் வளாகத்தில் கொடி இறக்கப்படும்.
இதை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கேவிஎஸ் பள்ளி மைதானத்தில் விழாக்குழுவினர் சார்பில் பொருட்காட்சியும் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் வெளிநாடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து பங்கேற்பார்கள். ஏற்கனவே இந்த விழாவை ஊர் சாட்டுதல் நிகழ்ச்சி அன்றே திருக்கோயில் வளாகம் மற்றும் தெப்பக்குளம் பகுதி ஆகியவைகள் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பராசக்தி ஸ்ரீமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...