மக்களவை தொகுதியில் போட்டியிட ஒரு ரூபாயுடன் வந்த சுயேட்சை வேட்பாளர்
தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சனிக்கிழமை தொடங்கியது. இதில், விருதுநகர் மக்களவை தொகுதிக்கு முதல் நாளிலேயே இத்தொகுதியில் போட்டியிட 5 பேர் சுயேட்சை


விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ரூ.1 உடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தையே சுயேட்சை வேட்பாளர் பரபரப்பு அடையச் செய்தார்.
தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் சனிக்கிழமை தொடங்கியது. இதில், விருதுநகர் மக்களவை தொகுதிக்கு முதல் நாளிலேயே இத்தொகுதியில் போட்டியிட 5 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். விருதுநகர் அருகே சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த நரசிங்கம் என்பவரின் மகன் வழக்குரைஞர் ஆனந்த்(43), ராஜபாளையம் அருகே நக்கனேரியைச் சேர்ந்த ரஜினி நற்பணி மன்றத்தின் செயலாளர் மன்மதன்(60). சிவகாசி பட்டித்தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டியன் என்பவரின் மகன் தியாகராஜன்(68), சிவகாசியைச் சேர்ந்த ரெங்கராஜன், மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சின்னப்பூலாம்பட்டியைச் சேர்ந்த கொப்பையன் மகன் கார்த்திகைசாமி(31) ஆகிய 5 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
அரசியல் கட்சியினர் மட்டுமே தேர்தலை நாளை ஆவலோடு எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், பொதுவாக தேர்தலில் தனிநபர்கள் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது டெபாசிட் பணத்தை சில்லரையாகவும், மாலையாகவும் அணிந்து வருதல், மாட்டுவண்டியில் வலம் வந்து வித்தியாசமாக வந்து வேட்பு மனுத்தாக்கலில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், விருதுநகர் பகுதியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் ஒரு ரூபாயுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்து ஆட்சியர் அலுவலகத்தையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
விருதுநகர் அருகே சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த நரசிங்கம் என்பவரின் மகன் ஆனந்த்(42). இவர் பி.எஸ்.சி, பி.எல் படித்து பயிற்சி வழக்குரைஞராக தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் காலை 11.30 மணிக்கு மனுவை பூர்த்தி செய்து முன்மொழிவோர்களுடன் வந்தார். அதையடுத்து வேட்பு மனுவை ஆட்சியரிடம் மனுவை தாக்கல் செய்தார். பின்னர் மனுவை சரிபார்த்து டெபாசிட் தொகை ரூ.12500 செலுத்த வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.
என்னுடன் வந்தவர்கள் கொண்டு வருவார்கள் எனக்கூறியதோடு, முன்பணமாக ரூ.1ஐ ஆட்சியரிடமும் கொடுத்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் திருப்பி கொடுத்து, மாலைக்குள் செலுத்துமாறு கூறினார். அதன் பின்னர் அப்பகுதியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அதையடுத்து, தேர்தலில் போட்டியிடுபவர்கள் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த படிவங்களை தேர்தல் அலுவலர்களிடம் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் செலுத்துவதாக கூறிவிட்டு சென்றார்.
இவர் இதற்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே வித்தியசாமாக நடக்கிறதே என பரபரப்பாக அடங்காத நிலையில் அலுவலர்கள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...