தலித் மாப்பிள்ளை அழகிரிக்கு துரோகம் செய்து, தலித்துகளுக்கு எதிரானவர் என நிரூபித்துவிட்டார் கருணாநிதி
தாழ்த்தப்பட்டோர் மாப்பிள்ளையான அழகிரியை வஞ்சித்ததன் மூலம் கருணாநிதி தலித்துகளுக்கு எதிரானவர் என்பதை நிரூபித்துவிட்டார் என்று கூறியுள்ளார் .


தாழ்த்தப்பட்டோர் மாப்பிள்ளையான அழகிரியை வஞ்சித்ததன் மூலம் கருணாநிதி தலித்துகளுக்கு எதிரானவர் என்பதை நிரூபித்துவிட்டார் என்று கூறியுள்ளார் .
மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் முருகவேல்ராஜன். மக்கள் விடுதலை கட்சித் தலைவரும் பாமக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல் ராஜன். மதுரையில் செய்தியாளரிடம் பேசியபோது, மக்கள் விடுதலை கட்சியானது தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காகப் போராடுகிறது தற்போதைய தேர்தலில் காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறோம் தாழ்த்தப் பட்டோருக்கு உரிய மரியாதையை காங்கிரஸ் அளித்து வருவதால் ஆதரவு தெரிவிக்கிறோம். அழகிரியை நீக்கியதால், திமுக ஏற்கெனவே தோற்றுவிட்டது மு.க.அழகிரி தாழ்த்தப் பட்டோர் பிரிவைச் சேர்ந்த காந்திமதியை திருமணம் செய்ததால், தலித்துகளின் சம்பந்தி என்று கருணாநிதி கூறிவந்தார்.
ஆனால் இப்போது அழகிரியை ஓரம் கட்டியதால், தாழ்த்தப் பட்டோரின் மாப்பிள்ளை என்ற காரணத்துக்காக ஒரு ஓட்டைக் கூட திமுகவுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் அளிக்க மாட்டார்கள். கருணாநிதிக்கு உரிய அரசியல் நுணுக்கம் அழகிரிக்கு உண்டு , ஆனால் அந்த நுணுக்கம் ஸ்டாலினுக்கு இல்லை. முதல்வராகும் தகுதியும் ஸ்டாலினுக்கு இல்லை. அழகிரி தேவையின்றி பழிவாங்கப் படுகிறார். கட்சியில் அழகிரியின் வீழ்ச்சி கருணாநிதியின் விழ்ச்சியாகவே உள்ளது. ஆகவே இனி கருணாநிதி தாழ்த்தப்பட்டோர் சம்பந்தி என்று கூறி தலித் ஓட்டைப் பெற முடியாது மக்களவைப் பிரசாரத்தில் அழகிரிக்கு ஆதரவாக நியாயம் கேட்போம்.
ஔரங்கசீப்பின் வரலாற்றை கருணாநிதி படிப்பது நல்லது, அழகிரி ஔரங்கசீப்பாக மாறுவார்பாமகவில் அன்புமணியும் ராமதாஸை காயப்படுதியுள்ளார். இது சரியல்ல. எங்களை உருவாக்கிய சுயமரியாதை மிக்க ராமதாஸை காயப்படுத்தியதை மறக்க மாட்டோம்.அழகிரி மீது தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால், அவர் எங்களின் குல மாப்பிள்ளை. அவருக்கு ஒரு ஆபத்து என்றால் எங்கள் குலப் பெண்தான் பாதிக்கப்படுவார்.
எனவே நாங்கள் அவருக்கு அரணாக இருப்போம். - என்றார். இந்த பேட்டியின் போது காங்கிரஸ் கட்சியினர் சிலரும் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...