டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரை: வெளிநாட்டு கரன்ஸி வாங்கி பணம் தராமல் ஏமாற்றிய மர்மநபர்

மதுரை கே.கே.நகர் பகுதியில் வெளிநாட்டுப் பணம் மாற்றும் நிறுவனம் வைத்திருப்பவர் கணேஷ் (25). இவரிடம் மாவட்ட நீதிமன்றம் எதிர்புறம் உள்ள விடுதியில் தங்கியிருந்த சிராஜுதீன் என்பவர் அடிக்கடி

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:46 am

ஜெயப்பாண்டி

மதுரையில் வெளிநாட்டுக் கரன்ஸிகளை வாங்கிவிட்டு மோசடி செய்ததாக மர்மநபர் மீது போலீஸார் வியாழக்கிழமை  வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

மதுரை கே.கே.நகர் பகுதியில் வெளிநாட்டுப் பணம் மாற்றும் நிறுவனம் வைத்திருப்பவர் கணேஷ் (25). இவரிடம் மாவட்ட நீதிமன்றம் எதிர்புறம் உள்ள விடுதியில் தங்கியிருந்த சிராஜுதீன் என்பவர் அடிக்கடி செல்லில் தொடர்புகொண்டு இந்தியப் பணத்துக்கு வெளிநாட்டுப் பணம் தேவை எனக்கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி கணேஷ் விடுதிக்குச் சென்று சிராஜுதீனைச் சந்தித்து 690 யூரோ கரன்ஸிகள், 980 யுடி டாலர்கள், 360 மலேசியன் ரிங்கிட்டுகள் ஆகியவற்றை அளித்துள்ளார். அதற்கு இந்திய ரூபாய் ரூ.1.25 லட்சம் தருமாறு கணேஷ் கேட்டுள்ளார்.

வெளிநாட்டுப் பணத்தை வாங்கிக்கொண்ட சிராஜுதீன், தனது ஆவணங்களை நகல் எடுத்துவிட்டு, பணத்தை எடுத்துவருவதாகக் கூறியதுடன், அறையில் தங்கியிருக்குமாறும் கணேஷைக் கேட்டுக்கொண்டுள்ளார்.  இதைநம்பிய கணேஷ் அறையில் இருந்துள்ளார். ஆனால், வெளியில் சென்ற சிராஜுதீன் நீண்டநேரமாகியும் திரும்பவில்லையாம். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாம். இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷ் வியாழக்கிழமை மதுரை அண்ணாநகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸôர் வழக்குப்பதிóந்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.