15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மனைவியோடு பிரச்னை: வீட்டிற்கு தீ வைத்த கணவர்: 5 வீடுகள் எரிந்து நாசம்

குறிஞ்சிப்பாடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையில்  கணவர் வீட்டிற்கு தீ வைத்ததில் அருகில் இருந்த 5 வீடுகள் எரிந்து சாம்பலானது. தீயை அணைக்க முயன்ற 12 பேர் படுகாயம் அடைந்தனர்

Updated On :12 மார்ச் 2014, 10:42 am

குறிஞ்சிப்பாடி அருகே மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையில்  கணவர் வீட்டிற்கு தீ வைத்ததில் அருகில் இருந்த 5 வீடுகள் எரிந்து சாம்பலானது. தீயை அணைக்க முயன்ற 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த கண்ணாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்கொழுந்து மகன் கெங்காசலம். இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கெங்காசலம் தனது குடிசை வீட்டிற்கு தீ வைத்தார். இதில் வீட்டிலிருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ மேலும் பரவி அருகில் இருந்த கதிரேசன், தியாகராஜன், துரைராஜ், கனகராஜ் ஆகியோர் வீட்டிற்கும் பரவியது.

தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள், நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் சென்று தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்களை மீட்கவும், தீயை அணைக்கவும் முயன்ற கணேசமூர்த்தி, மணி, தனசேகர், விஜயன், விஜயகுமார், சிவராஜ், சிலம்பரசன், தினேஷ்பாபு, சந்திரகாசன், பாக்கியராஜ், பாரதி, சேகர் ஆகிய 12 பேர் படுகாயம் அடைந்தனர்.அனைவரும் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எம்.எல்.ஏ.,க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன் ஆகியோர் காயமடைந்தவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினர். தீ விபத்து குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கெங்காசலத்தைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.