டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மதுரை வெடிகுண்டு வழக்கில் 3 பேர் கைது: பைப் வெடிகுண்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்

மதுரை உத்தங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:41 am

ஜெயப்பாண்டி

மதுரை உத்தங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மேலூர் அருகிலு பதுங்கியிருந்த தங்கராஜ் மற்றும் கவியரசன் என்ற இருவரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் தங்கியிருந்த வில்லாபுரம் வீட்டில் சோதனை செய்தபோது, 2 நாட்டு வெடிகுண்டு, 2 பைப் வெடிகுண்டு, 6 ஜெலட்டின் குச்சி, ஒரு கத்தி, வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்கள் மற்றும் 7 மீ வயர், லேப்டப் செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.