ஆம்பூர் அருகே இரு சமுதாயத்தைச் சேர்ந்த காதல் ஜோடி தலைமறைவானதால் மனமுடைந்த பெண்ணின் தந்தை பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதில், பெண்ணின் பெற்றோரை மிரட்டிய காதலனின் உறவினர்களை கைது செய்ய பாமகவினர் வலியுறுத்தி உள்ளனர்.
பட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், முன்னாள் எம்எல்ஏக்கள் இளவழகன், டி.கே. ராஜா உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், காதலனுடன் சென்ற பெண்ணின் பெற்றோரை, காதலனின் குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர். எனவே, காதலனின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்யும் வரை, தற்கொலை செய்த தந்தையின் உடலை வாங்கமாட்டோம் என்று கூறினர்.
மேலும், பெற்றோரை மிரட்டிய மூன்று பேரையும் கைது செய்ய வலியுறுத்தி ஆம்பூர் பொது மருத்துவமனையில் பெண்ணின் சகோதரர் தீக்குளிக்க முயன்றார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் அங்கு ஏராளமான காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை உயர் அதிகாரிகள் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

