டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிலத்தரகர்கள் இருவர் சாவு

ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வாணியம்பாடி - ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.  மோட்டார்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:49 am

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் நிலத்தரகர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வாணியம்பாடி - ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.  மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்களும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.   இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.ஆம்பூர் தாலுகா போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது மோட்டார் சைக்கிள் நொறுங்கி கிடந்துள்ளது.  அருகாமையில் இரு நபர்கள் படுகாயங்களுடன் சடலமாக கிடந்துள்ளனர்.  அவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இறந்தவர்கள் ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமம் காந்தி நகரை சேர்ந்த அப்துல் மாலிக் (49), மேல்காலனியை சேர்ந்த சக்திவேல் (35) என்பதும், அவர்கள் இருவரும் நிலத்தரகர்கள் என்பது தெரியவந்தது.  போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.