குடிநீர் கேட்டு கொட்டும் மழையிலும் பொதுமக்கள் சாலை மறியல்
ஆம்பூர் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் குடிநீர் கேட்டு கொட்டும் மழையிலும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்ட்திதல் ஈடுபட்டனர். அதனால் சுமார் ஒரு மணி நேரம்


ஆம்பூர் அருகே எல்.மாங்குப்பம் கிராமத்தில் குடிநீர் கேட்டு கொட்டும் மழையிலும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்ட்திதல் ஈடுபட்டனர். அதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆம்பூர் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் எல்.மாங்குப்பம் கிராமம் உள்ளது. அக்கிராமத்தில் சுமார் 3 மாதங்களாக பொதுமக்களுக்கு ஊராட்சி சார்பில் சரிவர குடிநீர் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது. குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதே போல எல்.மாங்குப்பம் கிராம தெருக்களில் கழிவுநீர் கால்வாய்கள் இல்லாததால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் இருந்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத்தில் பலமுறை பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். அதனால் ஊர் நாட்டாண்மை தனசிங் தலைமையில் பொதுமக்கள் திரண்டு ஆம்பூர் - பேர்ணாம்பட்டு மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்துக் கொண்டு காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் தலைமையில் உமர்ஆபாத் போலீஸார் அங்கு சென்று போராட்டம் நடத்திய பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டிராக்டரில் குடிநீர் வழங்கவும், கழிவுநீர் கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உள்ளாட்சி பிரதிநிதிகள் உறுதி அளித்ததின் பேரில் சுமார் ஒரு மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...