அதன் அடிப்படையில் ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளரான சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) பாபு, சிவகாசி தொகுதிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் பிரபாகரன், விருதுநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வீ.ஜெயக்குமாரும், சாத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதனும், அருப்புக்கோட்டை சட்டப்பேரவை தொகுதிக்கு மகளிர் திட்ட அலுவலர் பிச்சையும், திருச்சுழி சட்டப்பேரவை தொகுதிக்கு கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் குருமூர்த்தியும் என மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர் நடராஜன் தெரிவித்தார்.