தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 29-ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி, தொடர்ந்து கடந்த 5-ம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக, திமுக, மதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 37 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.அம்மனுக்களின் மீது பரிசீலனை ஆட்சியர் வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்களவை தொகுதி தேர்தல் பார்வையாளர் அனில்குமார் தலைமையில், ஆட்சியர் டி.என்.ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி உள்ளிட்ட அலுவலர்களின் முன்னிலையில் பரிசீலனை நடைபெற்றது. இதில், வேட்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஒவ்வொரு மனுக்களையும் பரிசீலனை தேவையான விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளனவா, கையொழுத்து மற்றும் சொத்துப்பட்டியல் உள்ளிட்டவைகளை அளிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.