திமுக வேட்பாளர் ரத்தினவேலின் சொத்து மதிப்பு ரூ.9.15 கோடி
அசையும் சொத்துக்கள்: வேட்பாளர் பெயரில் கையிருப்பு ரொக்கம்-ரூ.35000, வங்கி இருப்பு ரூ.5006000, பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு-ரூ.27266257, காப்பீடு-ரூ.251183, வங்கிக் கடன்-ரூ.2372939,


விருதுநகர் மக்களவை தொகுதியின் வேட்பாளர் ரத்தினவேலின் வேட்பு மனுத்தாக்கல் படிவம்-26ல் ரூ.9.15 கோடிக்கு சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.
அசையும் சொத்துக்கள்: வேட்பாளர் பெயரில் கையிருப்பு ரொக்கம்-ரூ.35000, வங்கி இருப்பு ரூ.5006000, பல்வேறு நிதி நிறுவனங்களில் முதலீடு-ரூ.27266257, காப்பீடு-ரூ.251183, வங்கிக் கடன்-ரூ.2372939, வாகனங்கள் மதிப்பு-ரூ.1151908, 40 கிராம் தங்கம் ரூ.104000 என மொத்தம் ரூ.3,69,34,627 ஆகும். அவரது மனைவி பத்மினி பெயரில் கையிருப்பு ரொக்கம் ரூ.25000, வங்கி இருப்பு-ரூ.742542, நிதி நிறுவனங்களில் முதலீடு-ரூ.14088399, காப்பீடு-ரூ.474386, வங்கிக் கடன் ரூ.1,89,154, நகைகள் 800 கிராமின் மதிப்பு-ரூ.2080000 என மொத்தம் ரூ.1,75,99481 ஆகும்.
அசையா சொத்துக்கள்: வணிக வளாகம் 8300 சதுர அடியின் மதிப்பு ரூ.2.50 கோடி, வீடு 1490 சதுர அடி ரூ.6000000, அவரது மனைவி பத்மினி பெயரில் வீடு ரூ.6000000 ஆகும்.
கடன் கொடுபட வேண்டியது: வேட்பாளர் பெயரில் ரூ.39,50000ம், பத்மினி பெயரில்-ரூ.434420 ம் உள்ளது. எனவே அவர் பேரில்-ரூ.6,79,34,627ம், அவரது மனைவி பேரில் ரூ.2,35,99,48 என மொத்தம் ரூ.9,15,34,108 உள்ளதாக வேட்பு மனுத்தாக்கல் படிவம் 26-ல் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு ரூ.3.09 கோடி: அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனின் வேட்பு மனுத்தாக்கல் படிவம் 26-ல் ரூ.3.09 கோடிக்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணன் பெயரில் அசையும் சொத்தின் விவரம்: கையிருப்பு ரூ.1 லட்சமும், 112 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.314384ம், அவரது மனைவி பாக்கியலட்சுமி பேரில் கையிருப்பு ரொக்கம் ரூ.7 லட்சம், 800 கிராம் தங்கம் மதிப்பு ரூ.2245600ம், அவரது துணைவியார் ஜெயலட்சுமியின் பேரில் கையிருப்பு ரொக்கம் ரூ.1 லட்சம், 600 கிராம் தங்கம் மதிப்பு ரூ.1684200 ஆகும்.
அசையா சொத்தாக வேட்பாளரின் பேரில் வீடு மதிப்பு ரூ.8440218, மனைவி பாக்கியலட்சுமியின் பேரில் ரூ.12491268ம், துணைவியார் ஜெயலட்சுமியின் பேரில் ரூ.987044ம் உள்ளன. ஆக மொத்தம் ரூ.3,09,19,824 சொத்து மதிப்பாக குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...