தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காங்கிரஸை குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடுங்கள்: வைகோ

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 320க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறுவது உறுதி. கடந்த 5 ஆண்டுகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அடித்தட்டு

Updated On :4 ஏப்ரல் 2014, 2:33 pm

காங்கிரஸை குப்பைத் தொட்டியில் தூக்கிப் போடுங்கள் என வாக்காளர்களுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

வடசென்னை தேமுதிக வேட்பாளர் செüந்தரபாண்டியனை ஆதரித்து வியசர்பாடியை அடுத்த முத்தமிழ் நகரில் திறந்த வேனில் நின்று பிரசாரம் மேற்கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 320க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறுவது உறுதி. கடந்த 5 ஆண்டுகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அடித்தட்டு மக்களின் அத்தியாவசிய செலவுகள் கூடியுள்ளது.காங்கிரஸ் தற்போது ஆக்சிஜன் பொருத்தப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. டெபாசிட்டுக்காக போராடி வருகிறது. காங்கிரஸை குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது. இந்தத் தேர்தலுக்கான போட்டியில் திமுக இல்லை.

தமிழக மீனவர்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் துரோகம் இழைத்துள்ள காங்கிரசுக்கும் திமுகவுக்கும் மன்னிப்பே கிடையாது. நான் தேமுதிகவுக்காக முதல் முறையாக வாக்கு சேகரிக்கும் இடம் முத்தமிழ் நகர். ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் அதிர்ச்சி தரும் கூட்டணியாக பாஜக கூட்டணி இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.