2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்கு அனுமதி வழங்க சிறப்பு குழு அமைப்பு 

விருதுநகர் மக்களவை தொகுதியில் தேர்தல் பிரசாரம், ஊர்வலம் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ஒலி அமைப்பு மற்றும் வாகனம் ஆகியவைகளுக்கு அனுமதி வழங்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:53 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியில் தேர்தல் பிரசாரம், ஊர்வலம் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், ஒலி அமைப்பு மற்றும் வாகனம் ஆகியவைகளுக்கு அனுமதி வழங்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மக்களவை தேர்தலை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதனால், தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதின் அடிப்படையிலும், விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது இருக்கிறது. எனவே தேர்தல் பிரசாரங்கள், ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும், ஒலிபெருக்கிகள் அமைப்பதற்கும் சிறப்பு குழு அனுமதி வழங்கப்பட இருக்கிறது. இது போன்றவைகளுக்கு அனுமதி அளிப்பதற்காகவே பல்வேறு துறையின் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

இக்குழுவின் பொறுப்பாளராக விருதுநகர் வட்டார காவல் துறை  துணைக்கண்காணிப்பாளர்(தேர்தல்) ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் நகராட்சி பகுதிகளில் ஒருங்கிணைப்பு குழு அலுவலராக விருதுநகர் நகராட்சி பொறியாளரும், ஊராட்சி பகுதிகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலராக ஆட்சியர் அலுவலக உதவி இயக்குநர்(கிராம ஊராட்சிகள்) ஆகியோர் இருப்பர். ஒருங்கிணைப்பு அலுவலர்களாக விருதுநகர் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலரும், மின்சார வாரிய உதவி நிர்வாக பொறியாளரும், மண்டல போக்குவரத்து அலுவலரும் செயல்பட இருக்கிறார்கள். 

அதனால், அரசியல் கட்சியின் நிர்வாகிகள், தேர்தல் பிரசார கூட்டங்கள், ஊர்வலங்கள், வாகனங்கள் மற்றும் ஒலி பெருக்கிகள் அமைக்க சிறப்பு குழுக்களிடம் மனுக்கள் அளித்து அனுமதியை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.