மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாமுவேல்ராஜ் வேட்பு மனுத்தாக்கல்
விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சாமுவேல்ராஜ், தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோருடன் வந்து புதன்கிழமை மாவட்ட


விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சாமுவேல்ராஜ், தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோருடன் வந்து புதன்கிழமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனுத்தாக்கல் செய்தார்.
விருதுநகர் மக்களவை தொகுதியின் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த சாமுவேல்ராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு 12.25 மணிக்கு வந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் டி.என்.ஹரிஹரனிடம் மனுத்தாக்கல் செய்தார். அப்போது உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமி, வட்டார செயலாளர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்டோர் இருந்தனர். இதில் இக்கட்சியின் மாற்று வேட்பாளராக மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம்(62) வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இத்தொகுதியில் பொதுமக்களின் வாழ்வாதரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக போராடியதன் அடிப்படையில் நன்கு அறிமுகம் இருக்கிறது. அதேபோல், விபத்துக்களால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதுபோன்று காயம் அடைந்தவர்களை மதுரை போன்ற இடங்களுக்கு கொண்டு செல்கிற நிலைமை இருக்கிறது. இதை தடுக்கும் வகையில் இங்கு மருத்துவக் கல்லூரி அமைத்து அங்கு தலைக்காய சிகிச்சை பிரிவை கொண்டு வர பாடுபடுவேன்.
மேலும், சாலைகளில் கூட்ட நெரிசலை குறைத்து ரயில் பாதையை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். இப்பகுதியில் பாதுகாக்கப்பட வேண்டிய சிறு தொழில்கள் நிறையவே உள்ளன. அதில் பட்டாசு தொழிலை பாதுகாத்து, அதை ஏற்றுமதி செய்வதற்கு அரசின் பங்களிப்பு இருக்க வேண்டும். அதேபோல், மத்திய அரசின் உதவியோடு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரவும் பாடுபடுவேன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சாமுவேல்ராஜ் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...