விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோருடன் வந்து வேட்பு மனுவை ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் தாக்கல் செய்தார்.
விருதுநகர் மக்களவை தொகுதியில் அதிமுகவின் சார்பில் வேட்பாளராக டி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இவர் அதிமுக ஆதரவாளர்களுடன் செவ்வாய்கிழமை எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து விட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக அமைச்சருடன் சரியாக 2 மணிக்கு வந்தனர். அதையடுத்து, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு பகல் நேரம் 2.35 மணிக்கு நல்ல நேரம் என்பதால் அரை மணிநேரம் ஆட்சியரின் அறையிலேயே அமர்ந்திருந்தனர்.
அதையடுத்து, சரியாக 2.35 மணிக்கு அமைச்சர் முன்னிலையில் 3 வேட்பு மனுக்களை ராதாகிருஷ்ணன் ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் அளித்தார். அப்போது, வேட்பாளருடன் விருதுநகர் மக்களவை தேர்தல் பொறுப்பாளரும், மாநில மகளிரணி துணைச் செயலாளர் சக்திகோதண்டம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.பாண்டியராஜன், வைகைச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் மீண்டும் 10 நிமிடங்கள் வரையில் அமர்ந்திருந்து விட்டு புறப்பட்டுச் சென்றனர். அதையடுத்து, அதிமுக வேட்பாளருக்கு மாற்று வேட்பாளராக டி.ராதாகிருஷ்ணன் மகன் ஆர்.தர்மராஜன் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
அதையடுத்து நுழைவு வாயில் பகுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொண்டர்களிடையே பேசுகையில், அதிமுக வேட்பாளர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. அதற்கு தொண்டர்களும், நி்ர்வாகிகளும் கடுமையாக உழைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா்கள் 48 போ் கைது

காரைக்குடி, திருப்பத்தூா் பகுதிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1.35 கோடி ஒதுக்கீடு - ப. சிதம்பரம் எம்.பி. தகவல்

நில அளவை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கல்லல் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

