2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகரில் வைகோ மனுதாக்கல்

விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தனது ஆதரவாளர்கள்,  கூட்டணி கட்சியினர் ஆகியோருடன்

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:52 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்காக மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தனது ஆதரவாளர்கள்,  கூட்டணி கட்சியினர் ஆகியோருடன் வந்து செவ்வாய்கிழமை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் டி.என்.ஹரிஹரனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

விருதுநகர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக பிற்பகல் 1.25 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அதையடுத்து, சரியாக 1.30 மணியளவில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் டி.என்.ஹிரஹரனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அப்போது, உடன் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் தமிழருவிமணியன், தலைமைக் கழக வழக்குரைஞர் தேவராஜ், விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், வழக்குரைஞர்கள் சங்க பிரிவு செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். அதற்கு பின் ஆட்சியர் அறைக்குள் 15 நிமிடங்கள் வரையில் அமர்ந்திருந்தார்.

அதையடுத்து, தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் இருந்து தேர்தல் தொடர்பான விதிமுறைகள் மற்றும் செலவின படிவம் ஆகியவைகளை கையொழுத்திட்டு பெற்று கொண்டார். இதற்கிடையே இத்தொகுதியில் போட்டியிட்ட போது ஆட்சியர்களாக இருந்தவர்கள் விவரங்கள் குறித்து ஆட்சியர் டி.என்.ஹரிஹரனிடம் கூறிக் கொண்டிருந்தார். பின்னர் வெளியே வந்து நுழைவு வாயில் பகுதியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: என் மீது உள்ள வழக்குகள் மற்றும் தேச துரோக வழக்குகள் குறித்த  விவரங்களையும், சொத்து தொடர்பாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.